பள்ளி வளாகத்தைப் பசுமையாக்கல்
௨௬-
௧௧-
௨00௯,
வியாழன் அன்று எங்கள் பள்ளியில் பள்ளி வளாகத்தை பசுமையாக்கல் திட்டத்தின் கீழ் தேசியப் பசுமைப் படை சார்பாக மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
தலைமையாசிரியர் திரு.
பரமசிவ ஐயர்,
நான்,
தமிழாசிரியர் திரு.
மு.
பிரனவகேஸ்கர்,
திரு.
இளங்கோவன் ஆகியோர் மரங்களின் அவசியம் பயன்கள் பற்றி உரையாற்றினோம்.
ஆசிரியர்களும் மாணவர்களும் பள்ளியிலும் அவரவர் வீடுகளிலும் மறக்கன்றுகளை நட்டனர்.
மரக்கன்றுகளை புதுச்சேரி மாநிலப் பயிற்சி மையமும்,
ஈஷா யோக மையமும் இணைந்து மரக்கன்றுகளை வழங்கின.
மறக்கன்றுகளை சிறப்பாக வளர்க்கும் மாணவர்களுக்கு பரிசுகளும் பாராட்டுகளும் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.