Monday, November 30, 2009

பள்ளி வளாகத்தைப் பசுமையாக்கல்

பள்ளி வளாகத்தைப் பசுமையாக்கல்

௨௬-௧௧-௨00௯, வியாழன் அன்று எங்கள் பள்ளியில் பள்ளி வளாகத்தை பசுமையாக்கல் திட்டத்தின் கீழ் தேசியப் பசுமைப் படை சார்பாக மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. தலைமையாசிரியர் திரு.பரமசிவ ஐயர், நான், தமிழாசிரியர் திரு.மு.பிரனவகேஸ்கர், திரு.இளங்கோவன் ஆகியோர் மரங்களின் அவசியம் பயன்கள் பற்றி உரையாற்றினோம். ஆசிரியர்களும் மாணவர்களும் பள்ளியிலும் அவரவர் வீடுகளிலும் மறக்கன்றுகளை நட்டனர். மரக்கன்றுகளை புதுச்சேரி மாநிலப் பயிற்சி மையமும், ஈஷா யோக மையமும் இணைந்து மரக்கன்றுகளை வழங்கின. மறக்கன்றுகளை சிறப்பாக வளர்க்கும் மாணவர்களுக்கு பரிசுகளும் பாராட்டுகளும் வழங்கப்படும் ன்றும் அறிவிக்கப்பட்டது.

Monday, September 28, 2009

ஓசோன் படலப் பாதுகாப்பு விழா

ஓசோன் படலப் பாதுகாப்பு விழா
௧௬-0௯-௨00௯ அன்று எமது பள்ளியில் மேற்கண்ட விழா நடைபெற்றது. தலைமையாசிரியர் திரு .பரமசிவ ஐயர் அவர்கள் தலைமையுரை ஆற்றினார். நான் ஓசோன் படலம் அழித்தல் பற்றிய அறிவியல் விளக்கங்கள் அளித்தேன். நானும் ஆசிரியை தனவந்தினியும் சேர்ந்து ஓர் இன்னிசை நடனத்துக்கு ஏற்பாடு செய்திருந்தோம். ஆசிரியர்கள் தனராஜா, இரமேஷ், ஆசிரியைகள் ஆனந்தலட்சுமி மஞ்சுளா இந்துமதி ஆகியோர் உறுதுணையாக இருந்தனர்.

படங்கள் சில:-மாணவர்கள் ஓசோன் மூலக்கூறுகள் குளோரோ புளோரோ கார்பனால் ஆக்சிஜனாக மாறும் வேதிவினையையும் சூரியனிடமிருந்து புற ஊதாக்கதிர்கள் வந்து மனிதனுக்கு தீந்கிழைப்பதையும் விளக்குதல்

Friday, May 1, 2009

புவி நாள் விழா-2009

புவி நாள் விழா-2009

எங்கள் பள்ளியில் ௨௨-௦௪-௨௦௦௯ அன்று "புவி நாள் விழா கொண்டாடப்பட்டது. புது டெல்லியில் உள்ள TERI என்ற சுற்றுசூழல் அமைப்பின் வேண்டுகோளுக்கிணங்க காகிதப்பைகள் தயாரிக்கும் நிகழ்ச்சியாக அமைத்திருந்தோம். மாணவர்கள் விருப்பமாக கலந்து கொண்டனர். தலைமையாசிரியர் திரு.கு.லோகநாதன் அவர்கள் பாலிதின் ஒழிப்பு பற்றிய உரை ஆற்றினார்.



நான் பாலிதின் பைகளுக்குப் பதிலாக காகிதப்ப்பைகளைப் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தைப் பற்றிப் பேசினேன். ஓவிய ஆசிரியர் திரு.தனராஜா அவர்கள் காகிதப்பைகளை செய்யும் முறைகளைக் கற்றுக்கொடுத்தார். மாணவர்கள் நுற்றுக்கும் மேற்பட்ட காகிதப்பைகளை செய்தனர். காகிதப்பைகளுடன் நடை அழகுப் போட்டியிலும் கலந்து கொண்டனர்.

Thursday, April 16, 2009

பசுமைப் பள்ளி செயல் திட்ட நிறைவு விழா- 2009


பசுமைப் பள்ளி செயல் திட்ட நிறைவு விழா


0-0-00 செவ்வாய்க்கிழைமை அன்று சி. பி. இராமசாமி ஐயர் அறக்கட்டளையின்சார்பாக எங்கள் பசுமைப்பள்ளி செயல்திட்ட நிறைவு விழாவும், மரக்கன்றுகளைத்தத்துக்கொடுக்கும் விழாவும், பசுமைப்படை மாணவர்களை வழியனுப்பும் விழாவும்நடைபெற்றன. செயல்திட்டம் தொடர்பாக நீர், மின்சாரம் ஆகியவற்றை அளவிடும் கருவிகளைப்பொருத்துதல், மழை நீர் சேகரிப்புக் குழாய்களைப் பொருத்துதல், வகுப்பறைகளில்மட்கும், மட்காதக் குப்பைகளுக்குத் தனித்தனிக் குப்பைக் கூடைகள் வைத்தல், கழிவுக்காகிதங்களை மறுசுழற்சிக்கு அனுப்புதல், பள்ளிச் சுற்றுச்சூழல் விதிகள் ஏற்படுத்துதல், ஆமைகள், பறவைகள், மரம்,செடி,கொடிஆகியவற்றைப் பாதுகாத்தல், கணக்கெடுத்தல்ஆகிய செயல்கள் கடந்த நான்கு மாதங்களாக நடைபெற்றன. இவ்விழாவில் தலைமை ஆசிரியர் திரு.கு.லோகநாதன் அவர்கள் தலைமை தாங்கினார். தமிழாசிரியர் திரு.மு.பிரணவகேஸ்கர் மதிப்புரை ஆற்றினார். நான் செயல்திட்டம் பற்றியும் கூடுதலாக செய்யப்பட்ட பணிகள் குறித்தும் விளக்கம் அளித்தேன். மாணவர் கலை நிகழ்ச்சிகள் சிலவும் ஏற்பாடு செய்திருந்தேன். நாளிதழ்களுக்கு இது குறித்து நான் வழங்கிய செய்திகள் வெளிவந்தன. "இந்து" ஆங்கில நாளேட்டுக்காரர்கள் பள்ளிக்கு வந்து செய்திகள் திரட்டிக்கொண்டு சென்றனர். எங்கள்பள்ளியின் சுற்றுச்சுழல் கல்வி குறித்து அவர்கள் விரிவான செய்தி வெளியிட்டனர்.


A school that offers eco lessons worth learning

Serena Josephine M.
Students turn Government Middle School into an eco-friendly institution
Photo: T. Singaravelou

To attract birds: Students of Government Middle School at Nallavadu placing a feeder box on a tree on the school premises. —

PUDUCHERRY: When the concept of environment conservation seems to be resonating in every nook and corner of the country, students of Government Middle School at Nallavadu have succeeded in turning precept into practice.

The students have transformed this simple rural school into an eco-friendly institution.

Situated in the coastal village of Nallavadu, nearly 10 km from Puducherry, the 51-year-old school started undertaking clean and green initiatives in December 2008, sources said. In just four months, the students, with the help of teachers, have started scores of activities – for the betterment of not only the school but also the entire coastal village.

It all started with the implementation of the “Green School Initiative Project” with the support of CPR Foundation, Chennai, the Environment Cell of Puducherry and the Directorate of School Education. Ten groups were formed in the school for electricity management, water management, paper bank, solid waste management, sapling plantation, herbal garden, bird watch, coastal club, turtle guards and biodiversity management, headmaster grade-II of the school K. Loganathan said.

“A year ago, a non-governmental organisation donated saplings to the school. There were 20 varieties of saplings, including herbal plants. The students were entrusted the job of watering the saplings and protecting them. They have been carrying out the job with utmost care and the trees have grown well,” he said.

There are a total of 320 students from LKG to Class VIII at the school. The groups comprise students from Standard V as members, while those in Class VII and VIII monitor the activities.

One of the vital activities carried out by the students was water conservation. “We have installed a water meter and the students maintain a record of readings every day. They mark the readings once in the morning and the evening. Through this, they have understood the importance of conserving water and close the taps immediately after use,” Mr. Loganathan said.

Boards had been kept in each classroom denoting the use of fans and lights in the classrooms. The students switch off fans and lights whenever not required, trained graduate teacher M. Pranavakeskar said.

Trained in solid waste management, the students run a compost yard at the school. On collecting leaves and degradable waste in the yard, the students, with the help of teachers, convert the waste into manure and use it for the trees on the premises. Two-coloured garbage bins had been kept in each classroom for collecting paper and plastic separately.

Documenting local bio-resources, the students had been maintaining a biodiversity register listing down the varieties of trees, animals, fish, birds and insects in the village. Feeder boxes had been fitted on trees for birds, according to R. Ilanguirane, In-charge of National Green Corps at the school.

Happy with their accomplishments so far, the students said that they had created awareness among the villagers of protection of turtles.

“We clean the seashore to keep it garbage-free. After learning to save electricity at the school, I am following the same at home too,” said Geetanjali, a student of Class VIII.

Surya, another student, said, “Our school had no trees earlier. Now, there is plenty of greenery around us and we eat our lunch by sitting under the shade of trees. We have indeed learnt to conserve nature.”

மேற்கண்ட செய்தியைப் பின் வரும் இணைப்பிலும் காணலாம்.

http://www.hindu.com/2009/04/09/stories/2009040952570300.htm

Sunday, April 12, 2009

ஒரு மழைத்துளி நனைகிறது…

- ‘ஒரு மழை இரவும் ஓராயிரம் ஈசல்களும்’ நூலிலிருந்து

இதோ கார்மேகத்தின் ஓரம் கிழிய
விழுந்துகொண்டிருக்கிறேன்
பூமித்தாயின்
புன்னகை முகம் நோக்கி….

நான் எங்கே விழுவது ?

அதோ அங்கே
காகிதக் கப்பலோடுக் காத்திருக்கும்
அந்த ஹைக்கூக் கவிதையின்
முதலெழுத்தாகவா ?

வற்றிக்கொண்டிருக்கும் அந்த
வைகையாற்றின்
வயிற்றுப் பகுதியிலா?

ஒற்றைக்காலோடு பூமியைப்
பற்றிக்கொண்டிருக்கும்
பச்சைப் புற்களின்
புன்னகைப் பற்களிலா ?

சட சடச் சங்கீத்தை
எனக்குள்
சுடச் சுடச் திணிக்கும்
இலைகளின் தலைகளிலா ?

வற்றாக்கடலின் ஓரத்தில்
ஒற்றைப்பாறையின் பல்லிடுக்கில்
சிங்கார வாய்திறந்து காத்திருக்கும்
அந்த சின்ன சிப்பியின் தாகத்திலா ?

இதழ்களின் இடைவெளியிலும்
கவிதை எழுதிக் காத்திருக்கும்
அந்த
வாசனைப் பூக்களின்
மகரந்த மடியினிலா ?

மரங்களும் மலைகளும்
மேகத்தை வாசித்துக் கொண்டிருக்கும்
அந்த
கானக சாலையிலா ?

விழிகள் விரிய விரியத் தேடுகிறேன்…
எனில் நனையக்காத்திருக்கும்
பூமியில் விழுந்து
நான் நனைய வேண்டும்

தயவுசெய்துக் காட்டுங்கள்
வயலுக்குள் உயிரைநட்டு
உயிருக்குள்
என் வருகைக்குக் காத்திருக்கும்
ஓர் விவசாயி நண்பனை …

நான் விடுத்த பதில்

மாசடைந்த இந்த பூமியில் அந்த மழைத்துளி
விழுந்து வீ ணாக வேண்டாம்.
அது அங்கேயே இருக்கட்டும்.
மனிதர்கள் திருந்தும் வரை.

Wednesday, February 4, 2009

பாலிதின் ஒழிப்பு விழிப்புணர்வு - தெரு நாடகம்

பாலிதின் ஒழிப்பு விழிப்புணர்வு - தெரு நாடகம்
௨௬-0௧-௨00௯ அன்று குடியரசு நாளில் புதுவை காந்தி சிலை அருகில் நடத்தப்பட்டது. நானும் ஆசிரியர் இரமேஷும் இந்த நாடகத்தை வடிவமைத்திருந்தோம். பேராஸிரியர். தங்கப்பா அவர்களின் மகளும் ஆசிரியையுமாகிய திருமதி. மின்னல் எனக்கு சில வழிகள் காட்டினார். அவரின் யோசனைப்படி மாணவர்களின் துணை கொண்டு வசனங்கள் அமைத்து மிகவிரைவாக இந்த நாடகத்தை உருவாக்கினோம். பள்ளியிலும், பிறகு புதுவையிலும் நாங்கள் இதை அரங்கேற்றினோம். மாநில முதலமைச்சர் திரு. வி. வைத்தியலிங்கம் அவர்களும் அரசு அதிகாரிகளும் பார்வையாளர்களாக அமர்ந்திருந்தனர். எனக்கு இது ஒரு புதிய அனுபவம். இந்த வாய்ப்பை வழங்கிய புதுவை மாநிலப் பயிற்சி மையத்திற்கு நன்றி.

இனி படங்களும் விடியோ காட்சிகளும்:-

பங்கேற்ற மாணவர்கள்

வீர வசனம்


வீடியோ காண்க

Wednesday, January 7, 2009

பசுமைப் பள்ளி செயல் திட்டத் தொடக்க விழா

பசுமைப் பள்ளி செயல் திட்டத் தொடக்க விழா

பள்ளியில் நடைபெற்ற விழாவில் மாணவர்கள் உறுதிமொழி
தலைமையாசிரியர் திரு. K.Loganathan உரையாற்றல்




தமிழ்
ஆசிரியர் திரு.M. Piranavakeskar உரையாற்றல்




மாணவர் உறுதிமொழி ஏற்றல்