Wednesday, March 24, 2010

தட்பவெப்ப மாற்ற விழிப்புணர்வு விழா

௨௨-0௨-௨0௧0, திங்கள் கிழமை தட்பவெப்ப மாற்ற விழிப்புணர்வு விழா நடைபெற்றது. ஒரு வாரம் நடைபெற்ற இவ்விழாவில்
  • கழிவற்ற நாள் கடைப்பிடித்தல்,
  • கடற்கரை மரக்கன்றுகள் பராமரிப்பு விழா,
  • படிம எரிபொருள் சேமிப்பு நாள் கடைப்பிடித்தல்,
  • பொம்மலாட்டம்,
  • பல்லுயிர்ப்பெருக்கப் பதிவேடு வெளியிடல்,
ஆகிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

கழிவற்ற நாள் கடைப்பிடித்தல்
பள்ளியில் இப்படி ஒரு நாள் கடைப்பிடிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட வகுப்புகளில் ஒரு வகுப்புக்கு குழுக்கள் முறை முலம் சுழற்கேடயம் வழங்கப்பட்டது.கடற்கரை மரக்கன்றுகள் பராமரிப்பு விழா
இவ்விழாவின் பொது மாணவர்கள் நல்லவாடு கிராமத்தில் கடற்கரையில் உள்ள குட்டியாண்டவர் கோயில் தோப்பில் உள்ள மரககன்றுகளுக்கு நீர் ஊற்றுதல் முதலிய பராமரிப்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

படிம எரிபொருள் சேமிப்பு நாள் கடைப்பிடித்தல்
இந்தநாள் பள்ளி ஆசிரியர்களால் "வாகனமில்லா நாள்" ஆகக் கடைப்பிடிக்கப்பட்டது.
பள்ளியில் ஒருமணி நேரம் மின்சாரம் நிறுத்தப்பட்டு "பூமி நேரம்" கடைப்பிடிக்கப்பட்டது. மாணவர்களுக்கு எரிபொருள் செலவில்லாமல் இயற்கை உணவு தயாரிக்கும் முறைகள் பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது. ஆசிரியர்களும் அறுபதிற்கும் மேற்பட்ட மாணவர்களும் இயற்கை உணவு உட்கொண்டனர். அந்த ஒருநாளில் சேமிக்கப்பட்ட படிம எரிபொருட்கள் , தடுக்கப்பட்ட கார்பன் டை ஆக்சைடு ஆகியவற்றைக் கணக்கிட்டு உரையாற்றப்பட்டது.
பொம்மலாட்டம்
"உட்டியாக்குவோம் உலகை" ன்ற தலைப்பில் கலைசங்கமம் நுண்கலைக்குழுவினர் பொம்மலாட்டம் நிகழ்த்தினர்.
பள்ளி மாணவர்கள் தயாரித்த "பல்லுயிர்ப்பெருக்கப்பதிவேடு" வெளியிடப்பட்டது.
மாணவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்து நாளிதழ் செய்தி கீழே
A school where awareness programmes are aplenty Staff Reporter

PUDUCHERRY: The Government Middle School at Nallavadu turned into a venue for scores of awareness programmes on environment conservation and climate change during a four-day environment awareness programme held recently.

The school organised the “No waste day” and awarded a rolling trophy to the “waste-free” class as part of the programme.

A drive to maintain the saplings along the shoreline was organised, during which students took up maintenance works including watering saplings along the Nallavadu village beach shore, according to a press release.

To reduce usage of fuel for a day, the school teachers observed “No Vehicles Day”. Power was cut-off for an hour in the school to signify the “Earth hour”. Training on preparing natural food was also imparted.

An awareness programme on climate change was conducted. “Nallavadu village biodiversity registry” was released on the occasion. Headmaster of the school N. Paramasiva Iyer was present, added the release.

It was organised by the National Green Corps of the school, CPR Environmental Education Centre, Chennai and State Training Centre, Puducherry.

No comments: